டீசல் விலை உயர்வு: காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

டீசல் விலை உயர்வு காரணமாக, காய்கறிகளின் விலை 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, கோயம்பேடு காய், கனி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை உயர்வு: காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

டீசல் விலை உயர்வு காரணமாக, காய்கறிகளின் விலை 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, கோயம்பேடு காய், கனி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 சென்னை கோயம்பேடு சந்தையில் 1,859 காய்கறிக் கடைகளும், 820 பழக் கடைகளும், 475 பூக்கடைகளும் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு கோவை, நீலகிரி, மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், தில்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் 300 }க்கும் மேற்பட்ட லாரிகளில் மூலம் சுமார் 2,500 டன் காய்கறிகளும், 1,500 டன் பழங்களும், 1,000 டன் பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.20) முதல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 10 சதவீதம் வரை உயர வாய்ப்பு: இதுகுறித்து கோயம்பேடு காய், கனி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகளின் விலையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் ரூ. 69-ஐ எட்டியுள்ளது. இதனால், வாகனங்களின் வாடகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 கோடைக்காலம் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலை மேலும் 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார் அவர்.
 காய்கறிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (கிலோவில்): பெரிய வெங்காயம் ரூ.15-20, சாம்பார் வெங்காயம் ரூ.20-25, தக்காளி ரூ.15-20, உருளைக்கிழங்கு ரூ.20-25, கத்திரிக்காய் ரூ. 15-20, பீன்ஸ் ரூ. 30-50, அவரைக்காய் ரூ.30-35, முள்ளங்கி ரூ.10-15, பீட்ரூட் ரூ. 10-12, முருங்கைக்காய் ரூ.25-30, வெண்டைக்காய் ரூ. 15-20, சேனைக்கிழங்கு ரூ. 25, காலிபிளவர் ரூ. 15-20, கேரட் ரூ.15-20.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com