ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு! 

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று அவரது மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு! 

சென்னை: ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது என்று அவரது மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் முதல்கட்டமாக ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. பின்னர் அதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேணடும் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம் புதனன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சுதாகர் மற்றும் ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களிடம் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், அடுத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பின்னர் கூட்டத்தில் பேசிய ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் கூறியதாவது:

அரசியலுக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும். நமது தலைவர் ரஜினி அப்படிப்பட்ட ஒரு தலைவராக இருப்பார். அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும்.

ரஜினியின் கட்சியில் குடும்பத்தில் ஒருவருக்குத்தான் பதவி. இதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அவருடைய கட்சியில் குடும்ப அரசியல் என்பது இருக்காது. நமக்கு உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவர் வேண்டும் அந்த தலைவராக ரஜினிகாந்த் இருப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com