கருணை இல்ல கல்லறைகளுக்கு அனுமதி பெறவில்லை: ஆட்சியர் நோட்டீசுக்கு தடை

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் சிறு அறை களைக் கொண்ட கல்லறைகள் அ

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் சிறு அறை களைக் கொண்ட கல்லறைகள் அமைக்க அனுமதி பெறாதது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் தங்கியிருந்த முதியவர்கள் மர்மமான முறையில் இறப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து இல்லத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அந்த இல்லத்தில் தங்கியிருந்த 294 முதியவர்களை மீட்டு அரசு இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
 இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து (கல்லறை மற்றும் இடுகாடு அமைக்கும்) விதிகளின்படி இல்லத்தில் சிறிய அளவிலான கான்கிரீட் கல்லறைகள் அமைக்க அனுமதி பெறவில்லை என கருணை இல்லத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீûஸ ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணை இல்லத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ரோமானியர்கள் காலத்திலேயே சிறு அறைகள் கொண்ட கான்கிரீட் கல்லறைகள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இதே போன்ற கல்லறைகள் அண்மையில்கூட கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 எனவே, மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸ் சட்ட விரோதமானது என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட ஆட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com