போலி மருத்துவர்கள் கண்காணிப்புப் பணி தீவிரம்!

தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி மருத்துவர்கள் கண்காணிப்புப் பணி தீவிரம்!

தமிழகத்தில் போலி மருத்துவர்களை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தமிழகத்தில் கடந்த ஆண்டு, டெங்கு உள்ளிட்டக் காய்ச்சல்களின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரில் சிலர் போலி மருத்துவர்களிடம் ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்தது கண்டறியப்பட்டது.
 இதையடுத்து, போலி மருத்துவர்களைக் கண்டறிய ஊரக மருத்துவப் பணிகள் இயக்ககத்தின் சார்பில் பிரத்யேக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
 இந்தக் குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த ஆண்டில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது, அலோபதி அல்லாத வேறு மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், அலோபதி மருந்துகளை பரிந்துரைத்தது மற்றும் சிகிச்சை அளித்தது என 283 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 இந்த நடவடிக்கை நிகழாண்டிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கன்னியாகுமரியில் 4 பேர், திருச்சியில் 2 பேர், நாகப்பட்டினம், வேலூரில் தலா ஒருவர் என இரண்டு போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இது தவிர, சேலத்தில் கருவில் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து, கருக்கலைப்பில் ஈடுபட்ட தமயந்தி, செல்வம்பா ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக ஊரக மருத்துவப் பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறும்போது, "தமிழகத்தில் போலி மருத்துவர்களைக் களை எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 கருவில் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிக்கும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருவில் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். முறையான மருத்துவக் காரணங்கள் இன்றி பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர்கள் தெரிவித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com