மேல்மருவத்தூரில் 28, 29-இல் சித்ரா பெளர்ணமி விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பெளர்ணமி வரும் சனி மற்றும் ஞாயிறு (ஏப்ரல் 28, 29) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பெளர்ணமி வரும் சனி மற்றும் ஞாயிறு (ஏப்ரல் 28, 29) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன.
 மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமி அன்று 1,008 யாக வேள்வி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சனிக்கிழமை (ஏப்ரல் 28) அதிகாலை மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
 இதில், கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்தர் பீடத்துக்கு வருகை புரியும் அடிகளார் வரவேற்கப்படுகிறார்.
 விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்தை ஆதி பராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைக்கிறார்.
 மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 29) மாலை 3 மணிக்கு சிறப்பு கலச, விளக்கு வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
 ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார். வேள்வி கலசங்களை இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் வழங்குகிறார்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள், தஞ்சை மாவட்டத் தலைவர் பி.எஸ். வாசன் தலைமையில், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மன்றங்கள், சக்தி பீட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com