தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தின் உள்மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.

தமிழகத்தின் உள்மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோடைக்காலம் தொடங்கி உள்ளதையொட்டி, தமிழகத்தின் உள்மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். மேலும், சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
 9 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 105 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 104, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104, வேலூரில் 103, சேலம், மதுரை, தருமபுரியில் 103, பாளையங்கோட்டையில் 101, கோவையில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
 மிதமான மழைக்கு வாய்ப்பு: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com