ரேஷன் கடை ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், ஒரே துறை, எடைக் குறைவு இல்லாமல் பொருள்கள் வழங்குதல், சேதாரக் கழிவு அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத் தொகை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் ரேஷன் கடை ஊழியர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளிலும் எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடை ஊழியர்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 6) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் துணை அமைப்புகளான தொமுச, சிஐடியு உள்ளிட்டவை சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக ரேஷன் கடைகள் திங்கள்கிழமை இயங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. 
இந்த நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடனான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் பழனிசாமி, துணைப் பதிவாளர் கோவிந்தராஜன் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நடத்தப்பட இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைப்புசாரா தொழிலாளர் பேரவை பொதுச் செயலாளர் பொன்ராம் கூறியது:
கூட்டுறவு சங்கப் பதிவாளர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அரசு சார்பில் குழு அமைத்து ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என பதிவாளர் உறுதியளித்தார். இதை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com