கருணாநிதியும் உதயசூரியனும்: 1957 துவங்கி அறுபது  ஆண்டுகளாக தொடர்ந்த பந்தம் 

திமுக என்னும் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக உதயசூரியன் சின்னமாக ஒதுக்கப்படுவதற்கு முன்னதாகவே தனது முதல் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார்.  
கருணாநிதியும் உதயசூரியனும்: 1957 துவங்கி அறுபது  ஆண்டுகளாக தொடர்ந்த பந்தம் 

சென்னை: திமுக என்னும் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக உதயசூரியன் சின்னமாக ஒதுக்கப்படுவதற்கு முன்னதாகவே தனது முதல் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கருணாநிதி போட்டியிட்டுள்ளார்.  

1949-ஆம் ஆண்டு,செப்டம்பர் 18-ம் நாள்,சென்னை,ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் திமுக என்னும் இயக்கம் துவக்கப்பட்டது. கட்சி துவங்கி மூன்று ஆண்டுகளில் பொதுத்தேர்தல் வந்தாலும் திமுக அதில் பங்குபெறவில்லை. பின்னர் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்துக்கு ஏற்ப 1957-ல் அண்ணா தலைமையில் தி.மு.க. முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்தது.

இந்த தேர்தலில் தி.மு.க., தான் போட்டியிட்ட தொகுதிகளில் பல சின்னங்களில் போட்டியிட்டது. இதில் அதிகமான இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. அறிஞர் அண்ணாவும் சேவல் சின்னத்தில்தான்  போட்டியிட்டார். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. இத்தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8, 296 வாக்குகள் அதிகம்பெற்று கருணாநிதி வெற்றிபெற்றார். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் திமுக காலடி எடுத்து வைத்தது  

பின்னர் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து முறையான அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் தி.மு.க-வுக்கு உதயசூரியன் சின்னம் நிரந்தரமாக கிடைத்தது. இஅதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக இதே சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஒரே சின்னத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது தி.மு.க. மட்டுமே என்பதுகுறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் இந்த சாதனை குறித்து கருணாநிதியின் சட்டப்பேரவை பொன்விழா கொண்டாட்ட சமயத்தில் 2017-ஆம் ஆண்டு, ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

“சட்டமன்றத் தேர்தல் களத்தில் 13 முறை போட்டியிட்டவர். 13 முறையும் வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாதவர். அத்தனை தேர்தல்களிலும் அண்ணா கண்ட ஒரே இயக்கம், அண்ணா தந்த ஒரே சின்னம் என தி.மு.கழகத்தையும் உதயசூரியனையும் வரலாற்று அடையாளங்களாகக் கொண்டு களம் கண்டு வெற்றிகளைக் குவித்தவர். இந்தப் பெருமை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடையாது என்பது தனிச் சிறப்பு.”

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com