திருச்சி சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக கையெழுத்துப் போட்டு பயிற்சி செய்த மு. கருணாநிதி

திருச்சி சிறையில் 6 மாதங்களுக்கும் மேலாக கையெழுத்துப் போட்டு பயிற்சி செய்த மு. கருணாநிதி

திராவிடம் என்ற வார்த்தையை உலகுக்குக் கொண்டு சேர்த்த தலைவர்களில் முக்கியமானவர் மு. கருணாநிதி.


திராவிடம் என்ற வார்த்தையை உலகுக்குக் கொண்டு சேர்த்த தலைவர்களில் முக்கியமானவர் மு. கருணாநிதி.

இயல், இசை, நாடகம் என எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கியதாலேயே இவர் கலைஞர் என்று அழைக்கப்பட்டார். கலைஞர் என்றால் படைப்பாளி என்று அர்த்தம். அந்த அர்த்தத்துக்கு சரியான உதாரணமாக விளங்கியவர் கருணாநிதி.

ஒரு முறை ஒரு சில பக்கங்களில் கருணாநிதியை கையெழுத்திடச் சொன்ன போது அவருக்கு பல நினைவுகள் திரும்பின. அவரைச் சுற்றியிருந்த தொழிலதிபர் மகாலிங்கம் மற்றும் கழகத் தோழர்களிடம் அவர் இவ்வாறு கூறுகிறார்.. உங்களுக்குத் தெரியுமா? எனது கையெழுத்திலேயே திராவிட நாடு இருக்கிறது என்று தனது கையெழுத்தில் இருக்கும்  V என்ற ஆங்கில எழுத்தைப் போன்ற ஒரு அமைப்பு இருப்பதை சுட்டிக் காட்டி, இந்திய வரைபடத்தில் தென்னிந்தியாவின் அந்த அமைப்பு இருப்பதை ஒப்பிட்டுக் காட்டினார்.

அதில் மற்றொரு விஷயத்தையும் அவர் சொன்னார். தனது கையெழுத்தில் கீழே வைக்கும் புள்ளி இலங்கையைக் குறிப்பதாகவும் தெரிவித்தார். 

இதுபோன்று கையெழுத்திட பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி சிறையில் இருந்த போது 6 மாத காலம் பயிற்சி எடுத்ததாகவும் கருணாநிதி குறிப்பிடுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com