அண்ணா பல்கலை. தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
அண்ணா பல்கலை. தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் 593 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. 

இந்நிலையில் 2017 ஏப்ரல்/ மே மாதங்களில் நடந்த தேர்வுகளின் மறுமதிப்பீட்டிற்காக 3 லட்சத்து 2 ஆயிரத்து 38 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மறுமதிப்பீட்டில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. 

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ஒரு விடைத்தாளுக்கு ரூ.10 ஆயிரம் வரை பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் பெற்றுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளால் நேர்மையாகப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கபட வாய்ப்புள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார்அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருசில பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த முறைகேடு அண்ணா பல்கலைக்கழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது.

எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைதாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை சரியான கோணத்தில் செல்வதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று கே.கே. ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com