எங்கள் உலகத்தையே மாற்றிக் கொடுத்தவர்.. கலைஞர் பற்றிய கண்ணீர் துளிகள்

கலைஞர் கருணாநிதி கொடுத்த மிகப்பெரிய கௌரவத்தால் எங்கள் உலகமே மாறிவிட்டது என்கிறார் சரோஜா எனும் திருநங்கை. 
எங்கள் உலகத்தையே மாற்றிக் கொடுத்தவர்.. கலைஞர் பற்றிய கண்ணீர் துளிகள்

கலைஞர் கருணாநிதி கொடுத்த மிகப்பெரிய கௌரவத்தால் எங்கள் உலகமே மாறிவிட்டது என்கிறார் சரோஜா எனும் திருநங்கை. 

அலி என்பது போன்ற மோசமான வார்த்தைகளால் அழைக்கப்பட்ட பாலினப் பிரச்னை கொண்டவர்களுக்கு திருநங்கை என்று பெயர் சூட்டி, அவர்களுக்கும் சமுதாயத்தில் ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

கருப்பு நிற சேலையில் சிகப்பு நிற புள்ளிகள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. முகத்திலும் சோகம் அப்பியிருந்தது. கையில் திமுக கொடியை பிடித்தவாறு, கருணாநிதியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற சரோஜா தனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி கூறுகிறார்.

தான் ஒரு திருநங்கை என்று அறிந்ததும், எனது பெற்றோரே என்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். தகாத வார்த்தைகளால் ஏச்சுக்களும் பேச்சுக்களும் பழகியிருந்தது.

அப்போதுதான் திருநங்கை என்று பாலினக் குறைபாடு இருந்தவர்களுக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி. இதனால் எங்கள் உலகமும் மாறியது.

வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல, அரசின் பல சலுகைகளும் வழங்கப்பட்டன. முதல் முறையாக வாக்குரிமை கிடைத்தது. அதுவும் திருநங்கை என்ற அடையாளத்தோடு கிடைத்த வாக்காளர் அடையாள அட்டையால் பல்வேறு சலுகைகளைத் தாங்கள் எளிதாகப் பெற முடிந்தது.

திருநங்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் வசித்து வரும் சரோஜா, கருணாநிதி இல்லையென்றால் எங்களது வாழ்வாதாரம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்காது, இன்னமும் தெருவோரங்களில்தான் இருந்திருப்போம் என்கிறார்.

கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்தான் 2008ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் அரவாணி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, பல்வேறு சலுகைகளையும் அரசு வழங்கியது.

ஊனமுற்றோர் என அழைக்கப்பட்டோரை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கினார். 

இதுமட்டுமா, முதல்வராக கருணாநிதி இருந்த காலங்களில் தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இதில் பெரும்பாலான திட்டங்கள் கருணாநிதியின் சொந்த ஆலோசனையின் பேரில் நிறைவேற்றப்பட்டவை. 

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களை வடமாநில அரசுகள் பின்பற்றியுள்ளன. மத்திய அரசும் பின்பற்றியுள்ளது. கருணாநிதி வலியுறுத்தியதால் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் பல.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-இல் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றபோது இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். வங்கிகளை நாட்டுடைமையாக்குவதற்கும், மன்னர் மானிய ஒழிப்புக்கும் கருணாநிதி துணை நின்றார். நில உச்சவரம்பு 15 ஏக்கராக மாற்றியமைக்கப்பட்டது. சட்டநாதன் ஆணையம் அமைத்து, பிற்படுத்தப்பட்டோருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக மாற்றியமைத்ததுடன், தாழ்த்தப்பட்டோருக்கு16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் மாற்றியமைத்தார் கருணாநிதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com