கடைசி ஆசையை சுமந்த சந்தனப் பேழை'!

கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையின் மேல் பகுதியில், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
கடைசி ஆசையை சுமந்த சந்தனப் பேழை'!

கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையின் மேல் பகுதியில், ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
குறு வாசகங்கள் அடங்கிய சின்ன சின்ன மலர்கள் என்ற நூலை கருணாநிதி பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார். அதில், ஓய்வின்றி உழைத்தவன், இங்கே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்' என்று தனது கல்லறையில் எழுதும் நாளுக்காக தவம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவரது விருப்பப்படியே உடலை வைக்க தயார் செய்யப்பட்ட சந்தனப் பேழையின் மேல் பகுதியில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்று எழுதப்பட்டிருந்தது.
சந்தனப் பேழையின் மேல் பகுதியின் மறுபுறத்தில், கலைஞர் மு.கருணாநிதி திமுக தலைவர், பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி (03.06.1924-07.08.2018)' என எழுதப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com