கலைஞர் கருணாநிதியை நினைவு கூறும் பாளையம்கோட்டை சிறைச்சாலை

பாளையம்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலையின் உள்ளே இருக்கும் 5ம் எண் அறை மிகவும் புகழ்பெற்ற அறையாக உள்ளது. 
கலைஞர் கருணாநிதியை நினைவு கூறும் பாளையம்கோட்டை சிறைச்சாலை

பாளையம்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலையின் உள்ளே இருக்கும் 5ம் எண் அறை மிகவும் புகழ்பெற்ற அறையாக உள்ளது. 

சிறைச்சாலைக்குள் என்ன புகழ்பெற்ற அறை என்று கேட்கலாம். ஆம்.. அந்த  அறை புகழ்பெற்றதுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிறை அறை வாயிலில் ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில், 
கலைஞர் கருணாநிதி
1965ம் ஆண்டு ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார்.
18.2.1965 - 4.4.1965 என்று பதிவிடப்பட்டுள்ளது.

நீதிக் கட்சித் தலைவர் ஈவெராவால் ஹிந்தி திணிப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது. கல்லக்குடியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி கைது செய்யப்பட்டு சுமார் 46 நாட்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரது நினைவாக, அந்த சிறை வளாகத்தில் அது பற்றிய தகவல் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com