கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

கர்நாடகாவின் கடற்கரை மற்றும் தென் பகுதி உள் மாவட்டங்களிலும், கேரளா மற்றும் தமிழகத்தின் 5 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்


சென்னை: கர்நாடகாவின் கடற்கரை மற்றும் தென் பகுதி உள் மாவட்டங்களிலும், கேரளா மற்றும் தமிழகத்தின் 5 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இந்தியாவில் உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள், அருணாச்சலம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.

நாளை, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழை நாளை ஓரளவுக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இடுக்கி அணை நிரம்பி, மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ள நிலைமையை சமாளிக்கக் கடலோரக் காவல்படையும், ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com