ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை 

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டதை எதிர்த்து அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அதில் கடந்த வியாழனன்று வழங்கப்பட்ட உத்தரவில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான உத்தரவை வழங்க முடியாது; ஆனால் அங்கு நிர்வாக ரீதியான பணியை மட்டும் நிர்வாகம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவு வழங்கப்பட்டது

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் ஐஏஎஸ், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின் ஐஏஎஸ், சட்டத்துறை செயலாளர் சு.ச. பூவலிங்கம், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் டி.சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com