ஆள் கடத்தல், கொத்தடிமை முறையை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

ஆள் கடத்தல், நவீன முறையிலான கொத்தடிமை முறையை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
தொடக்க விழாவில் பேசுகிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.
தொடக்க விழாவில் பேசுகிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.


ஆள் கடத்தல், நவீன முறையிலான கொத்தடிமை முறையை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் சமூக நலத் துறை, தொண்டு நிறுவனங்கள் சார்பில் சிறகுகள் விரிய மனிதக் கடத்தலுக்கு எதிரான கூட்டமைப்பு' தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிச் செயலர் சூசன் தலைமை வகித்தார். சமூக நலத் துறைத் தலைவர் பெனிட்டா மரியான் வரவேற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கலந்து கொண்டு பேசியது:
நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கொத்தடிமை முறைகள் இருந்தன. அப்போது, விவசாயப் பண்ணைகளில் மக்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். இதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களுக்குப் பின் அவை முற்றிலும் ஒழிக்கப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணத்துக்காகவும், உடல் உறுப்புகளுக்காகவும், பாலியல் தொழிலுக்காகவும் மனிதக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இதில், குழந்தைகளும், பெண்களுமே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நவீன முறையிலான கொத்தடிமை முறைகள் இன்றளவும் தொடர்கிறது. இவை மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. மனிதக் கடத்தலையும், கொத்தடிமை முறையைத் தடுக்க புதிய சட்டங்களைக் கொண்டு வந்தால் மட்டும் போதாது. அவை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் நல்லகண்ணு.
திங்கள்கிழமை காலை நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குநர் அமீர் கலந்து கொண்டு, மனிதக் கடத்தலுக்கு எதிரான கூட்டமைப்பைத் தொடங்கி வைத்தார். 
இதில், அந்தக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ.பிரிட்டோ, அமைப்பாளர் தேவநேயன், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி பி.எம். நாயர், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளி அமுலு, யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு பிரதிநிதி வித்யாசாகர், மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி டிபேன், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com