தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: எச்சரிக்கும் வானிலை

தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு: எச்சரிக்கும் வானிலை


சென்னை: தமிழகத்தில் கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குர் பாலச்சந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. இது சற்று வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் சூழல் உள்ளது.

மேற்கு திசைக் காற்றின் வலு மேலும் அதிகரிக்கக் கூடும் நிலையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மலைப் பகுதியில் அடங்கிய மாவட்டங்களான நீலகிரி கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் இதரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மீனவர்கள் வடக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல், அந்தமான் கடற் பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com