செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். பிளஸ்-டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

அடுத்த வாரத்தில் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். மேல்நிலைப் பள்ளிகள் கணிணி மயமாக்க ரூ.490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 14417 என்ற உதவி எண் மூலமாக மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்திலேயே நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். பிளஸ்-டூ முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப், சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 முதல் 5 வரை மற்றும் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் சீருடை மாற்றப்படும்.  அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com