கண் மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம்: டாக்டர்களுக்கு பயிற்சி

கண் மருத்துவத் துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த தொடர் கல்வி நிகழ்ச்சி கல்பவிருக்ஷô 18' டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.
அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய கண் மருத்துவம் குறித்த தொடர் கல்வி நிகழ்ச்சியில், சிறந்த மாணவி சஜிதா பிரவீணுக்கு தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிய அமைச்சர் 

நிகழ்ச்சியை தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அமர் அகர்வால் கூறியது: இந்தியாவில் 1.80 கோடி பேருக்கு பார்வைத்திறன் இழப்பு உள்ளது. இவர்களில் 55 சதவீதம் பேருக்கு கண்புரையால் பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளது. கண் மருத்துவத் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள், புதிய உத்திகளை இன்றைய இளம் கண் மருத்துவர்களுக்கு எடுத்துக் கூறுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
நாடு முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுணர்கள், கண் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பலன் அடைய உள்ளனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேரலை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நவீன சிகிச்சைகள் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண் மருத்துவ சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொண்டோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com