கேரள வெள்ளப் பாதிப்பு: ஒருநாள் சம்பளத்தை நிவாரணமாக அளிக்க தமிழக அரசு ஊழியர்கள் முடிவு 

கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கம் முடிவு செய்துள்ளது.

கேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கம் முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகள் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. வீடு, உடைமைகளை இழந்து உணவு, உடையின்றி மக்கள் தவித்து வருகின்றனர். கேரளத்தை புரட்டிப் போட்டுள்ள மழையால் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் சார்பாகவும் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கம் முடிவு செய்துள்ளது. 
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கேரளத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக அம்மாநில மக்களுக்கு உதவும் வகையிலும், அவர்களது துயரத்தில் தமிழக அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த நிவாரண நிதியை வழங்க முடிவு செய்துள்ளோம்.
முதல்வருக்கு வேண்டுகோள்: எங்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதி வழங்க உரிய ஆணை வழங்குமாறு தமிழக முதல்வரை அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com