முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் திடீரென 141.30 அடியாக குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை திடீரென 141.30 அடியாக குறைக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை திடீரென 141.30 அடியாக குறைக்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்
கேரளத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை 142.20 அடியாக இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அணையின் நீர்மட்டம் 141.30 அடி என தமிழக பொதுப்பணித்துறையால் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் தமிழக பகுதிக்கு 2 ஆயிரத்து 400 கன அடியாகவும், கேரளத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்துக்கு 19 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. 
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என்ற போதிலும் அணையின் நீர்மட்டம் திடீரென குறைக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com