மீனவப் படகை சரி செய்த பாகிஸ்தான் கடற்படை: நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா? எழும் கேள்வி

கேரளாவில் வெள்ள மீட்புப் பணிகளின் வழியாக இந்திய கப்பற்படையின் பெருமையை உலகறியும் என்றால், இந்த சம்பவம் மூலம் பாகிஸ்தான் கடற்படையின் சிறுமையை யாரறிவார்?
மீனவப் படகை சரி செய்த பாகிஸ்தான் கடற்படை: நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா? எழும் கேள்வி

கொச்சி: கேரளாவில் வெள்ள மீட்புப் பணிகளின் வழியாக இந்திய கப்பற்படையின் பெருமையை உலகறியும் என்றால், இந்த சம்பவம் மூலம் பாகிஸ்தான் கடற்படையின் சிறுமையை யாரறிவார்?

தமிழகத்தின் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் சென்ற படகு, யேமெனி கடற்கரையில் இருந்து சுமார்  300 நாடிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது.

இது குறித்து அவசர உதவியை நாடிய மீனவர்களுக்கு உதவ பாகிஸ்தான் கடற்படையினர் விரைந்தனர். அவர்களும் படகை சரி செய்து கொடுக்க முன்வந்தனர்.

ஆனால், அதற்கு கைமாறாக 12 மீனவர்களும் பாகிஸ்தான் ஸிந்தாபாத் என்று கூற வேண்டும் என கட்டளையிட்டனர்.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில், தற்போதுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது பற்றி மீனவர்கள் கூறுகையில், எங்கள் படகு பழுதாகி நின்று ஒரு வார காலத்துக்கும் மேலாகியும் எங்கள் அவசர உதவிக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பாகிஸ்தான் கடற்படையினர் எங்களுக்கு உணவு, குடிநீர் கொடுத்து எஞ்ஜினையும் சரி செய்து கொடுத்தனர். ஆனால், அதற்கு கைமாறாக பாகிஸ்தான் ஸிந்தாபாத் என்று கோஷம் எழுப்புமாறு கூறி அந்த விடியோவை பாகிஸ்தான் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பியதாக மீனவர்கள் கூறியுள்ளனர் என்று அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com