டெல்டா பகுதியைச் சேர்ந்த 924 குளங்கள்-ஏரிகள் நிரம்புகின்றன அமைச்சர் ஜெயக்குமார்

தஞ்சாவூர், திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் 924 குளங்கள்-ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது என அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
டெல்டா பகுதியைச் சேர்ந்த 924 குளங்கள்-ஏரிகள் நிரம்புகின்றன அமைச்சர் ஜெயக்குமார்


தஞ்சாவூர், திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் 924 குளங்கள்-ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது என அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் குளங்கள், ஏரிகளில் நிரம்பவில்லை என குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துக்குப் பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி பாயும் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தங்கு தடையின்றிச் சென்று கொண்டிருக்கிறது. 
காவிரி ஆற்றில் மிகுந்த அளவில் வந்து கொண்டிருக்கும் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி அரசால் நன்கு தூர்வாரப்பட்டு அது தனது முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு நிரப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, வீராணம் ஏரியில் இருந்து கடந்த இரண்டு வாரங்களாக சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூர், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் 19 பாசனக் கால்வாய்களில் விநாடிக்கு 4,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
கும்பகோணம் அருகிலுள்ள கீழணையில் இருந்து 7 பாசன வாய்க்கால்கள் மூலம் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் திறக்கப்பட்டு அங்கு வேளாண் பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
அதிக மழைப் பொழிவு காரணமாக மிகுதியான நீரைச் சேமித்து விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 924 குளங்கள், ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com