இந்தியமுறை மருத்துவப் படிப்பு: 2,500 விண்ணப்பங்கள் விநியோகம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 2,500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 2,500 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறைப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் படிப்புகளுக்கு தமிழகத்தில் சென்னை, திருமங்கலம் (மதுரை), பாளையங்கோட்டை, கோட்டார் (நாகர்கோவில்) ஆகிய இடங்களில் மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இந்த 6 அரசு கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுதவிர,  www.tnhealth.org  என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்பங்களைப் பெறுவதற்கு செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 3 மணி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே தேதியில் (செப்.5) மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com