நீட் தேர்வில் சிபிஎஸ்இ துரோகத்தை செய்துவிட்டு, மாணவர்களை குற்றம்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் - ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 
நீட் தேர்வில் சிபிஎஸ்இ துரோகத்தை செய்துவிட்டு, மாணவர்களை குற்றம்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் - ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வில் மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கையில், "நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியின் காரணமாக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட இயலாது. தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு இம்முறை நிவாரணம் எதுவும் அளிக்க வாய்ப்பு கிடையாது. நீட் தேர்வுக்கும், மருத்துவப் படிப்புக்கும் ஆங்கிலம்தான் மிகவும் முக்கியம் என்னும் பட்சத்தில், மாணவர்களுக்கு மாநில மொழியில் தேர்வு நடத்துவது எதனால்? இவற்றை சரி செய்ய வேண்டும்" என்று கூறியது. 

மேலும், இந்த வழக்கினை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.   

அதில், "தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 

இதற்கு முழுக்காரணம் சிபிஎஸ்இ மட்டுமே! துரோகத்தை செய்துவிட்டு மாணவர்களை குற்றஞ்சாட்டுவது ஆணவத்தின் உச்சம்! தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வெழுத தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் பிரச்சினை! கேள்வித்தாள் மொழிபெயர்ப்பில் குளறுபடிகளை செய்தது என நம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய சிபிஎஸ்இ தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com