கமல் எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட மாட்டார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் 

நடிகர் கமல் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் போட்டியிட மாட்டார் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கமல் எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட மாட்டார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் 

சிவகாசி: நடிகர் கமல் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் போட்டியிட மாட்டார் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல சிவகாசி மாவட்டம் சாத்தூரில் வெள்ளியன்று சைக்கிள் பேரணி நடந்தது. இதில் பங்கேற்க மாநில பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது , அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது   

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த அம்மாவின் வழியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் அரசு மீது வீண் பழி சுமத்தி பொய் பிரசாரம் செய்கிறது. அதனை முறியடித்து அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவே அ.தி.மு.க. சைக்கிள் பேரணிகளை மாநிலம் முழுவதும்  நடத்துகிறது. 

அரசியல் கட்சித் துவங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல, கவுன்சிலர் தேர்தல் உட்பட எந்த தேர்தல் நடந்தாலும், அதில் போட்டியிட மாட்டார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை.

அதேபோல் அழகிரி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் கூட எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் அது எப்போதும் அம்மாவின் கோட்டை. அங்கு அ.தி.மு.க. கண்டிப்பாக அமோக வெற்றி பெறும்.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போதுள்ள நடிகர்கள் யாருக்கும் இல்லை. நடிகர்கள் விஷால் உள்ளிட்டவர்கள் ஆசைப்பட்டு அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் எத்தனை நடிகர்கள் கட்சிகளை தொடங்கினாலும் தமிழகத்தை ஆளப் போவது என்னமோ திராவிட கட்சிகள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com