ஆவடி ரயில் நிலையத்தில் 2-ஆவது பயணச்சீட்டு மையம் இன்று திறக்கப்பட்டது

ஆவடி ரயில் நிலையத்தில் 2-ஆவது பயணச்சீட்டு மையத்தை திருவள்ளூர் எம்பி வேணுகோபால் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆவடி ரயில் நிலையத்தில் 2-ஆவது பயணச்சீட்டு மையத்தை திருவள்ளூர் எம்பி வேணுகோபால் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்தார். 

ஆவடி ரயில் நிலையம் அதை சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கு பயணளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அங்குள்ள தொழில் நிறுவனங்கள் பலவற்றுக்கும் அது உதவும் வகையில் உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாத பயணச்சீட்டு மையம் கட்டப்பட்டது. இதில், 3 கவுன்டர்கள் உள்ளன. 

இதை அமைச்சர் கே பாண்டியராஜன் மற்றும் சென்னை மண்டல ரயில்வே மேலாளர் நவீன் குலாடி முன்னிலையில் திருவள்ளுர் எம்பி வேணுகோபால் இன்று திறந்துவைத்தார்.  

ஆவடி ரயில் நிலையம், ஒருநாளைக்கு 80,000 பயணிகளுக்கு உதவி வருகிறது. அங்கு 3 விரைவு ரயில் வண்டிகள் நிற்கின்றன. ஆவடி ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 56 முறை சென்று வரும் விதத்தில் புறநகர் ரயில் சேவை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com