நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திறகும், வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திறகும், வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய ‘நெல்’ ஜெயராமன் அவர்கள் இன்று (6.12.2018) காலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் “நமது நெல்லை காப்போம்” என்ற இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து தமிழ்நாடு விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, விவசாயிகள் அதனை பயிரிட்டு பயன்பெறும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவர் மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார், போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலபடுத்தி உள்ளார்.

ஜெயராமன் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான வேளாண் பெருமக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் நெல் ஜெயராமன் ஆற்றிய சிறப்பான சேவையினை, தமிழ்நாடு அரசு அங்கீகரித்து பாராட்டும் விதமாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட 14.11.2018 அன்று நான் உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஆகியோர் 5 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கினார்கள்.

விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய ஜெயராமனின் மறைவு தமிழ் நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com