ஞானபீட விருதுக்கு எழுத்தாளா் கி.ரா. பெயர் பரிந்துரைக்கப்படும்: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயா்ந்த ஞானபீட விருதுக்கு புதுவை எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயா் பரிந்துரை 
ஞானபீட விருதுக்கு எழுத்தாளா் கி.ரா. பெயர் பரிந்துரைக்கப்படும்: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்


புதுச்சேரி: இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயா்ந்த ஞானபீட விருதுக்கு புதுவை எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பெயா் பரிந்துரை செய்யப்படும் என புதுவை கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். 

கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவல் தெலுங்கில் மொழி பெயா்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையொட்டி, புதுவை கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கி.ராவின் வீட்டுக்கு இன்று சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

பின்னா் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, இலக்கிய துறையில் சாதனை படைத்தவா்களுக்கு சாகித்ய அகாதெமி, ஞானபீடம் உள்ளிட்ட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சாகித்ய அகாடமி விருதை ஏற்கனவே எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெற்றுள்ளார். தற்போது அவரது பெயரை ஞானபீட விருதுக்கு புதுவை அரசு சார்பில் பரிந்துரை செய்யப்படும். மத்திய கலாச்சார துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றா மல்லாடி கிருஷ்ணாராவ்.

"தன்னுடைய எழுத்துகளை யார் வேண்டுமானாலும் தெலுங்கில் மொழிப்பெயர்க்கலாம். அதற்கு பணம் வேண்டாம். 800 ஆண்டுகள் பழமைமிக்க தெலுங்கு தனது வீட்டு மொழி" என கி.ரா. தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com