அரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை: பொதுமக்கள் அதிருப்தி

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட் டாப் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தும் பெரும்பாலான சேனல்கள் தெரியவில்லை என்று செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை: பொதுமக்கள் அதிருப்தி

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட் டாப் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்தும் பெரும்பாலான சேனல்கள் தெரியவில்லை என்று செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
 தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் அனைத்து இணைப்புகளுக்கும் செட் டாப் பாக்ஸ் பொருத்தும்படி அறிவித்திருந்தது. எனினும் கேபிள் தொழில் நடத்துவோர் செட் டாப் பாக்ஸ் வழங்குவதற்கு ரூ.500 முதல் ரூ. 800 வரை பணம் செலுத்தும்படி வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தினர்.
 இதையடுத்து, பலரும் மாதம் ரூ. 120 அல்லது ரூ.130 கொடுத்து ஒரு சில சேனல்களை மட்டுமே பார்க்கத் தொடங்கினர். அரசு கேபிள் நிறுவனம் தொடங்கியதை அடுத்து உள்ளூர் சேனல்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
 தமிழக அரசு கேபிள் டிவிக்கு செட் டாப் பாக்ஸ் கட்டாயம் என அறிவித்தபோது, கேபிள் தொழில் நடத்துவோர் மீண்டும் ரூ.500,
 ரூ. 800 என பணம் பெற்று அவற்றை வழங்கினர். செட் டாப் பாக்ஸ் பொருத்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மாதக் கட்டணமாக ரூ.250-ம், அது இல்லாதவர்களிடம் மாதக் கட்டணமாக ரூ.130-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
 இதனிடையே, கடந்த 10 நாள்களாக செட் ஆப் பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்த இணைப்புகள் சரிவர இயங்காமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். இது தொடர்பாக அவர்கள் கேபிள் டி.வி. அலுவலகங்களுக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்க முயன்றனர்.
 ஆனால், பெரும்பாலான கேபிள் டிவி அலுவலகங்களில் வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் தரவில்லை. நேரில் சென்றாலும் சரியான பதில் இல்லை என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
 இந்நிலையில், முறையான முன்னறிவிப்பு ஏதுமின்றி செட் டாப் பாக்ஸ் பொருத்தப்படாத வீடுகளுக்கு டிசம்பர் 1 முதல் அடியோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் டி.வி. சேனல்களில் சீரியல், ஆன்மிக நிகழ்ச்சிகள், சித்த வைத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்த்து வந்தவர்கள் அவற்றைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
 மேலும் செட் டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கியவர்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சரியாக தெரியவில்லை என்று புகார் தெரிவித்தாலும் முறையான பதில் வருவதில்லை. மாதா மாதம் செலுத்த வேண்டிய கட்டணமாக ரூ.250-ஐ வசூல் செய்கின்றனர்.
 அத்தொகையை வசூல் செய்ய வருபவர்களிடம் இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் கேட்டால் "அரசு கொடுக்கும் செட் டாப் பாக்ûஸத்தான் நாங்கள் கொடுக்கிறோம். உங்கள் டி.வி.யை சரிசெய்யுங்கள்' என்று பதில் அளிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
 இதுகுறித்து அரசு கேபிள் நிறுவனத் தரப்பில் விசாரித்தபோது, போதிய செட் டாப் பாக்ஸ்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் விநியோகிக்கவில்லை எனக் கூறுகின்றனர். "தற்போதுதான் இந்த பாக்ஸ்கள் செங்கல்பட்டு அரசு கேபிள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
 அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே நேரத்தில் அளிக்க முடியாது. அவசியம் என்றால் டிடிஹெச் எனப்படும் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கும் சேவைக்கு மாறிவிடுங்கள்' என கேபிள் டி.வி. அலுவலர்கள் கூறுவது பொதுமக்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.
 ஒவ்வொரு பகுதியிலும் அரசு கேபிள் டி.வி. அலுவலகம் வைத்து நடத்துபவர்களே இவ்வாறு அலட்சியமாக பதிலளிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு கேபிள் நிறுவனம் இதுகுறித்து முறையான அறிக்கையை வெளியிட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 இலவசம்.... ஆனால் இல்லை!
 இது குறித்து வட்டாட்சியர் இப்ராஹிமிடம் கேட்டபோது அவர் கூறியது:
 அரசு கேபிள் டி.வி.யில் டிஜிட்டல் முறையில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு செட் டாப் பாக்ஸ் இணைப்பு பெற வேண்டும் என அரசு ஓராண்டுக்கு முன்பே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து சிலர் அவற்றை வாங்கி டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகின்றனர். பெரும்பாலானோர் 7, 8 சேனல்கள் தெரிந்தால் போதும் என கேபிள் டி.வி.யைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 எங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து கேபிள் சேனல்களையும் நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்களிடம் செட் ஆப் பாக்ஸ்களைப் பொருத்தி டிஜிட்டல் முறையில் இணைப்புகளை தர வேண்டும் என்று அரசு கேபிள் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். செட் டாப் பாக்ஸ்கள் தேவைக்கேற்ப வந்தால் உடனடியாக வழங்கப்பட்டு விடும்.
 இந்த பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டியவைதான். எனினும், கேபிள் ரீசார்ஜ் செய்வதற்காக ரூ.180, வரி ஆகியவற்றைச் சேர்த்து ரூ.220 வாங்குவார்கள். அரசு கேபிள் டி.வி. போஸ்ட் பெய்டு திட்டம் போன்றது. தனியார் கேபிள் ப்ரீ பெய்டு திட்டமாகும். எனவே முன்கூட்டியே பணம் செலுத்தினால் தான் கேபிள் பார்க்கமுடியும்.
 வெளிச் சந்தையில் செட் டாப் பாக்ஸ் விலை ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை இருக்கும். அது இலவசம் என்று அரசு அறிவித்தாலும், பாக்ஸ் கிடைப்பது கடினமாக உள்ளது. கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் வரியுடன் சேர்த்து கேபிள் ரீசார்ஜுக்கு ரூ.450 வாங்குவது சரியானதுதான்.
 காரணம் சிலர் வீட்டைக் காலி செய்து விட்டுப் போகும்போது செட் டாப் பாக்ûஸயும் கூடவே எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனால் அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களே செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இந்தச் சூழலில் அவர்கள் 220 ரூபாயுடன் மேலும் ரூ.100, 200 வாங்குவது இதற்காகத்தான் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com