அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5,000 லஞ்சம்: கூட்டுறவு சங்கச் செயலர், நடத்துநர் கைது

மகன் கல்விக் கட்டணத்துக்காக கடன் கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்கச் செயலர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நடத்துநரை

மகன் கல்விக் கட்டணத்துக்காக கடன் கேட்ட அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்கச் செயலர் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நடத்துநரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
 பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியைச் சேர்ந்தவர் அரசுப் பேருந்து ஓட்டுநர் நனிகவுண்டன்(46). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் சொர்ணபுரியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் தனது மகன் கல்விச் செலவுக்காக ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
 கடன் வழங்க ஒப்புக் கொண்ட சங்கச் செயலர் மனோகரன், கடன் வழங்க வேண்டுமெனில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க செயலரான நாமகிரிப்பேட்டையச் சேர்ந்த வேலுச்சாமி(55) என்பவரை அணுக வேண்டும். அவர் கேட்கும் தொகையை வழங்கினால் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 இதையடுத்து, வேலுச்சாமியை பேருந்து ஓட்டுநர் நனிகவுண்டன் அணுகியுள்ளார். அப்போது ரூ.5,000 தந்தால் உடனடியாக கடன் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதற்கு ஓட்டுநர் நனிகவுண்டன் ஒப்புக் கொண்ட போதிலும், லஞ்சம் தர அவருக்கு விருப்பமில்லை.
 இதுகுறித்து அவர் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி வெள்ளிக்கிழமை மாலை திருச்செங்கோடு பேருந்து நிலையக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த வேலுச்சாமியிடம், நனிகவுண்டன் ரூ.5,000 லஞ்சம் வழங்கியுள்ளார்.
 அப்போது அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி டி.ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வேலுச்சாமியை கையும் களவுமாகப் பிடித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com