பண்ணாரியில் வன உயிரின விளக்க மையம் திறப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் வன உயிரின விளக்க மையத்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,
பண்ணாரியில் வன உயிரின விளக்க மையம் திறப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் வன உயிரின விளக்க மையத்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் திறப்பு விழா, பவானிசாகரில் ரூ. 2.50 கோடி செலவில் மீன் குஞ்சு உற்பத்தி, குளம் அமைக்க பூமி பூஜை, புங்கார் காராட்சிக்கொரை சோதனைச் சாவடியில் ரூ. 2.50 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம், பண்ணாரியில் ரூ. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புலிகள் வன உயிரின விளக்க மையம் திறப்பு விழா, சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா ஆகியன சனிக்கிழமை நடைபெற்றன.
 இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
 விழாவில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: வனத் துறையில் தற்காலிகமாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கான ஊதியம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களுக்கும், ஐந்து ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாத வனக் காவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடம்பூர் வனப் பகுதி மாக்கம்பாளையம் காட்டாற்று பள்ளம் குறுக்கே இரண்டு உயர்நிலைப் பாலம் உள்பட 17 சிறு பாலங்கள் கட்டப்படும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் சவாரிக்கு தற்போது அனுமதியில்லை. திம்பம் பகுதியில் இருந்து ஆசனூர் அடர்ந்த வனப் பகுதியின் வழியாக தாளவாடிக்கு மாற்றுப் பாதையில் செல்ல அனுமதியில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com