பள்ளி மாணவர்களுக்கான இயற்கை பாதுகாப்புப் பயிற்சி: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெறும் இயற்கை பாதுகாப்பு, வன விலங்குகள் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள்

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெறும் இயற்கை பாதுகாப்பு, வன விலங்குகள் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி முதல் (டிச. 9) இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
இயற்கை பாதுகாப்பு, வன விலங்குகள், பூங்காவின் செயல்பாடு ஆகியன குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலும், இதையடுத்து டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரையிலும் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு இரண்டு நாள்கள் வீதம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பயிற்சி வழங்கப்பட உள்ளது. 5-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளும் பயிற்சி முகாமில் ஒரு குழுவுக்கு 35 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இன்று முதல் முன்பதிவு: பயிற்சியில் சேர விரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி முதல் (டிச. 9) www.aazp.in/wintercamp என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம். ஒரு மாணவருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். தங்கும் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை பெற்றோர் செய்து கொள்ள வேண்டும். இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு "வண்டலூர் உயிரியல் பூங்காவின் தூதர்' என்ற சான்றிதழ் வழங்கப்பட்டு ஆண்டுக்கு 10 முறை பூங்காவுக்கு இலவசமாக வந்து செல்லலாம். மேலும், தகவல்களுக்கு 89039 93000 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com