ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
 தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான விசாரணையில், திங்கள்கிழமை (டிச. 10) நான் பேச அனுமதி கேட்பேன். அனுமதி தரவில்லை என்றால் அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-இல் மக்கள் திரண்டு வந்து போராட்டம் செய்து, ஒட்டுமொத்தமாக இந்த ஆலை வேண்டாம் என முடிவெடுத்ததால், அவர்களின் கோபத்துக்கு பயந்து, அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆலையை மூடியுள்ளது.
 தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தீர்ப்பு வரும் எனத் தோன்றவில்லை. இதனால் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்; ஆனால் வன்முறை இருக்காது.
 மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால் 5 கோடி மக்களுக்கு குடிநீர் இருக்காது; 25 லட்சம் பாசன நிலங்கள் அடியோடு அழியும்.
 ஒருவேளை, உச்சநீதிமன்றம் அதைத் தடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி தடுத்தாலும் தீர்ப்பை மீறி ரகசியமாக அணை கட்டப்படும் என நினைக்கிறேன். இதற்கு காரணம் மத்திய அரசுதான்.
 காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட்டார். ஆனால் இப்போதைய அரசு சரியாக செயல்படவில்லை.
 தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான தேர்தல் எப்போது வந்தாலும் யார் போட்டியிடுவது என திமுக தலைமை முடிவு செய்யும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com