வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.
 சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு கலந்து கொண்டார். பின்னர் கே.வீ.தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியது: வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் கூட்டணியில் 2004 இல் வெற்றி பெற்றது போல வெற்றி பெறுவோம்.
 தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, யாரை தலைவராக நியமித்தாலும் அவரின் கீழ் செயல்படுவோம். தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். சேலம் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவது குறித்து திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில்தான் தெரியவரும்.
 கடந்த 2004- இல் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போல, தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com