கருணாநிதி சிலை திறப்பு விழா: தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்

கருணாநிதி சிலை திறப்பு விழா நாளன்று தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் வருவதைத் தவிர்த்து பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருமாறு


கருணாநிதி சிலை திறப்பு விழா நாளன்று தொண்டர்கள் அண்ணா அறிவாலயம் வருவதைத் தவிர்த்து பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருமாறு திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவச் சிலை வருகிற 16-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட உள்ளது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.
அன்றைய தினம், இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடும் வகையில், திமுக தலைமை அலுவலகம் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள 
முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன் பொதுக்கூட்ட நிகழ்ச்சி தொடங்கும்.
எனவே, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்துக்கு வருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com