ஐஐடி சென்னை உணவு விடுதியிலேயே இப்படி ஒரு தீண்டாமையா?

ஐஐடி சென்னை கல்வி மையத்தில், மாணவர்களுக்கான உணவு விடுதியில், சைவ மற்றும் அசைவ மாணவர்களுக்கு தனித்தனி வழியும், தனித்தனி பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஐஐடி சென்னை உணவு விடுதியிலேயே இப்படி ஒரு தீண்டாமையா?

சென்னை: ஐஐடி சென்னை கல்வி மையத்தில், மாணவர்களுக்கான உணவு விடுதியில், சைவ மற்றும் அசைவ மாணவர்களுக்கு தனித்தனி வழியும், தனித்தனி பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சைவ உணவருந்தும் மாணவர்களுக்கு உணவு விடுதிக்கு வர தனி வழியும், கைக் கழுவுவதற்கு தனி வாஷ்பேஸினும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்கிள் அமைப்பைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து, அதற்கான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், உணவுப் பரிமாறும் பாத்திரங்களும், தட்டுகளும் சைவ மற்றும்  அசைவ மாணவர்களுக்கு தனித்தனியாக பயன்படுத்தப்படுவதாகவும், கல்வித் தரத்தில் உலகின் முதல் கல்வி மையமாக விளங்க முயற்சிக்கும் ஐஐடி சென்னை, உணவு விடுதியில் கலாச்சாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com