டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்: அமைச்சர் ஜெயகுமார் 

டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவர்: அமைச்சர் ஜெயகுமார் 


சென்னை: டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 

அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை  செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், அமமுகவிலிருந்து விலகும் முடிவை செந்தில்பாலாஜி எடுத்துள்ளார்.

மேலும், கரூரைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால், மீண்டும் அதிமுகவுக்குச் செல்ல முடியாத நிலையில் செந்தில்பாலாஜி இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் செந்தில் பாலாஜி இணைய உள்ளார். 

இதையடுத்து அமமுகவை அழிக்க நினைப்பவர்கள் உயர் மின் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம் என்றும் ஒரு சிறு குழு விலகி செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் உள்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் என்றும் அதற்கு முன்னோட்டம்தான் செந்தில் பாலாஜி என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

மேலும், ராமாயணத்தில் கைகேயி புலம்பியது போல டிடிவி தினகரன் உச்சகட்டமாக புலம்பியிருப்பதாவும், நாளைக்கே இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெற்றும் என ஜெயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com