திமுகவில் இணைந்தது ஏன்? சிறந்த தலைவர் யார்? செந்தில் பாலாஜி விளக்கம்

அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணா அறிவாலயத்தில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுகவில் இணைந்தது ஏன்? சிறந்த தலைவர் யார்? செந்தில் பாலாஜி விளக்கம்


சென்னை: அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணா அறிவாலயத்தில் இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். மு.க. ஸ்டாலினை சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் ஒரு இயக்கத்தில் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். இன்று ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

ஒரு சிறந்த தலைவர் என்பது தொண்டர்களுடைய அரவணைப்பை பெற்றிருப்பவராக இருக்க  வேண்டும். அப்படிப்பட்ட தலைவராக ஸ்டாலினைப் பார்க்கிறன். இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அரசு மக்களுக்கு எதிரான ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
கரூர் மாவட்ட மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப திமுகவில் இணைந்துள்ளேன். இருளை அகற்றி ஒளி தருவது சூரியன், இன்று எனது மனதில் இருந்த இருளை அகற்றி ஒளி தந்திருப்பது திமுக. 

சில ஊடகங்கள் சொல்வது போல எங்கெங்கோ சென்றுவிட்டு திமுகவுக்கு வரவில்லை. 1996ம் ஆண்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டேன். பிறகு அதிமுகவில் இணைந்து கொண்டு பணியாற்றினேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டோம். இப்போது திமுகவில் இணைந்துள்ளேன். ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தவே திமுகிவில் இணைந்துள்ளோம்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற தீர்ப்புக்குப் பிறகு மேல்முறையீடு செய்ய வேண்டாம், தேர்தலை சந்திக்கலாம் என்று முதலில் சொன்னதே நான்தான் என்று கூறினார். ஒரு தலைமையின் கீழ் இருந்த நான் தற்போது அதனை விமரிசிப்பது சரியாக இருக்காது என்றும் பதிலளித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அரசுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com