வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய தினகரனின் மனு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு 

வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில்  டிடிவி  தினகரன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய தினகரனின் மனு: உயர் நீதிமன்றம் நிராகரிப்பு 

சென்னை: வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் டிடிவி  தினகரன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வருமான வரித் துறை கடந்த 1995-1996 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தொடர்பாக விளக்கம் கோரி அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. 

அந்த நோட்டீஸில், டிடிவி தினகரன் நடத்திய டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் வெஸ்ட் பேக் லிமிடெட் நிறுவனத்துக்கு முன்பணமாக ஒரு லட்சம் டாலர் கொடுத்தது மற்றும் பான்யன் ட்ரீ நிறுவனத்துக்கு ரூ.11 லட்சம் டாலருக்கான வரைவோலை வழங்கிய விபரங்கள் தொடர்பாக கேட்கப்பட்டிருந்தன. இதற்கு டிடிவி தினகரன் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 1987-1988 ஆம் ஆண்டு முதல் 1997-1998 வரையிலான காலத்துக்கான டிடிவி தினகரனின் கணக்குகளை மீண்டும் ஆய்வு செய்ய உள்ளதாக வருமானவரித்துறை கடந்த 2001 ஆம் ஆண்டு டிடிவி தினகரனுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸை எதிர்த்து டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித் துறை சார்பில் வழக்குரைஞர் சீனிவாசன் ஆஜரானார். டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வழக்கு விசாரணயை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில்  இந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டிடிவி  தினகரன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com