கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு?

முன்னாள் முதல்வர், மறைந்த  திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படுகிறது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு?

முன்னாள் முதல்வர், மறைந்த  திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சிலையும் அதே நாளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க வருமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தில்லிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். 

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னைக்கு வரும் சோனியா, மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

மேலும் இந்த விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனிடையே நடிகர் கமல்ஹாசன் இதில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com