கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு, அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிலை திறக்கும் விழா நடைபெறுகிறது. 
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு, அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிலை திறக்கும் விழா நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் கூட்டணி அமையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில்,

மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு  போனவர்களின் தந்திர  விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நாளை நமதே என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், கட்சி சார்ந்த சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நேரம் ஒதுக்கியதால் மதுரை செல்வதால், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மதுரையில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மீண்டும் சென்னை திரும்புகிறார். மேலும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com