ஊதியப் பிடித்தம்: பிப்.9 -இல் தொழிற்சங்கங்கள் கண்டன கூட்டம்

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 7 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்த நிர்வாகத்தைக் கண்டித்து ,

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 7 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்த நிர்வாகத்தைக் கண்டித்து , வரும் 9 -ஆம் தேதி கண்டன கூட்டம் நடத்தவுள்ளதாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 7 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இது குறித்து வியாழக்கிழமை மாலை பல்லவன் இல்லத்தில் கூடி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 22 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தில், அரசின் இந்த தவறான அணுகுமுறையைக் கண்டித்தும், 13 -ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள குளறுபடிகளை தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் வரும் 9 -ஆம் தேதி 8 போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகங்கள் முன்பு கண்டன வாயிற்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறியது: 
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை போக்குவரத்துக் கழகம் பிடித்துள்ளது. அவசர அவசரமாக போடப்பட்டுள்ள 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இவற்றை தொழிலாளர்களிடம் எடுத்துரைக்கும் அதே நேரத்தில் நீதிமன்றத்திலும் முறையிடப்படும். மேலும் பிப்ரவரி 9 -ஆம் தேதிக்குப் பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com