ஸ்ரீ ராமச்சந்திராவில் மரபணு ஆய்வுக்கூடம் தொடக்கம்

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் அதி நவீன மரபணு ஆய்வுக்கூடம் புதன்கிழமை (ஜன.31) தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் அதி நவீன மரபணு ஆய்வுக்கூடம் புதன்கிழமை (ஜன.31) தொடங்கப்பட்டுள்ளது.
'மெட்ஜெனோம்' நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள நவீன மரபணு ஆய்வுக்கூடம் தொடர்பாக
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மைய விளையாட்டு அறிவியல் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.ஆறுமுகம், ஆய்வுத் துறையின் தலைவர் டாக்டர் எஸ்.பி.தியாகராஜன், புற்று நோய் மருத்துவ நிபுணர் சதீஷ் ஸ்ரீநிவாஸ், மெட்ஜெனோம் நிறுவனத்தின் தலைவர் சாம் சந்தோஷ், தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் வி.எல்.ராம்பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
''இந்த மையத்தில் மரபணு குறைபாடுகள் சார்ந்த சிகிச்சைகளுக்குத் தேவையான பரிசோதனைகளும் அறிவியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வுக் கூடம் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள உயர் ஆய்வு மையத்தில் செயல்படும்.
''நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளின் பயன்களை நோயாளிகளின் சிகிச்சைகளுக்கு வழங்குவதில் இந்த மரபணு சிகிச்சை ஆய்வுக் கூடத்தின் தொடக்கம் முக்கியமான முன்னேற்றமாகும். மேலும் மரபணுசார் நோய்களைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும். தற்போது பல நோய்களுக்கான காரணிகளை எளிதாகக் கண்டு
பிடிக்க முடியாத நிலை உள்ளதால், மரபணு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் காரணிகளைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.
சில விளையாட்டுக்களில் வீரர்கள் சிறந்து விளங்குவதற்கு மரபணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக ஜமைக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் ஓட்டம் சார்ந்த போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர்; குதிகால்களுக்கு அதிக உறுதியை அவர்களது மரபணுக்கள் அளிப்பதே இதற்குக் காரணமாகும். 
உலக அளவில் ஏற்படும் மரபணுசார் உடல்நலக் குறைபாடுகளில் 20 சதவீத பாதிப்பு இந்தியர்களுக்கு உள்ள நிலையில், இந்த ஆய்வுக் கூடம் மிகவும் அவசியம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com