அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 100 பேர் நீக்கம் 

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டனர் என்று குற்றம் சாட்டி, அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்ட 100 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 100 பேர் நீக்கம் 

சென்னை: கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டனர் என்று குற்றம் சாட்டி, அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்ட 100 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரு அணிகளாக செயல்பட்ட அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாக இணைந்தது. தற்பொழுது எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், ஓ. பன்னீர்செல்வம். துணை முதல்வராகவும் தொடர்ந்தனர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் கடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்பொழுது அவ்ருக்கு ஆதரவாக செயபடுபவர்களை எல்லாம் தொடர்ச்சியாக கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். 

அந்த வரிசையில் ஞாயிறன்று அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர்.  மதுரையை சேர்ந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 80 பேரும், விருதுநகரில் 25 பேரும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களைனைவரும் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டனர் என்பதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com