பார்கவுன்சில் தேர்தல்: சிறப்புக்குழுவின் விதிகள் போட்டியிடும் வழக்குரைஞர்களைக் கட்டுப்படுத்தாது

தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்குரைஞர்களை சிறப்புக் குழுவின் விதிகள் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது; இருப்பினும் இந்த உத்தரவு அகில இந்திய பார்கவுன்சிலின்

தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்குரைஞர்களை சிறப்புக் குழுவின் விதிகள் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது; இருப்பினும் இந்த உத்தரவு அகில இந்திய பார்கவுன்சிலின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் வரும் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை கடந்த மாதம் 25-ஆம் தேதி தேர்தலை நடத்தும் சிறப்புக்குழு வெளியிட்டது. மேலும் தேர்தலில் போட்டியிடுவோர் குறைந்தது 10 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும்; எந்த அரசியல் கட்சிகளிலும் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட சிறப்புக்குழுவால் இயற்றப்பட்ட 9 தீர்மானங்களையும் விதிகளாக வெளியிட்டது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்குரைஞர்களாக பணிபுரிந்தவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் முருகேந்திரன் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்குத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு 
முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'புதிய விதிகளைக் கொண்டு வர அகில இந்திய பார் கவுன்சிலுக்கும், மாநில பார் கவுன்சிலுக்கும் வழக்குரைஞர்கள் சட்டத்தின்படி அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு உள்ள அதிகாரங்கள் சிறப்புக்குழுவுக்கும் உள்ளது. அதே நேரத்தில் மாநில பார் கவுன்சில் கொண்டு வரும் விதிகளுக்கு அகில இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே விதிகள் செல்லுபடியாகும். தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் பெறவில்லை. எனவே இந்த புதிய விதிகள் தேர்தலில் போட்டியிடும் வழக்குரைஞர்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. பத்து ஆண்டுகளுக்குக் குறைவாக பணியாற்றிய வழக்குரைஞர்கள் தேர்தலில் போட்டியிட எந்தவிதமான தடையும் இல்லை. இவர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுவை தேர்தல் குழு பரிசீலிக்கலாம். ஆனால் இந்த உத்தரவுகள் அனைத்தும் அகில இந்திய பார்கவுன்சில் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட்டது' எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com