அரசுப் பள்ளிகளுக்கு செய்தித்தாள்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக 31 ஆயிரத்து 322 அரசு, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு செய்தித்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக 31 ஆயிரத்து 322 அரசு, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு செய்தித்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டப் பேரவையில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது மாணவர்கள் தங்களது பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், மொழித்திறன்களை வளப்படுத்திடவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இதையடுத்து தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு தமிழ் நாளிதழ், ஒரு சிறுவர் இதழ் வழங்க ரூ.4.83 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இருப்பினும் இந்தக் கல்வியாண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணி நாள்களுக்கு நாளிதழ் வாங்கிக் கொள்வதற்கான தொகையை அரசுக்கு தமிழ்நாடு பாடநூல், பணிகள் கழகம் வழங்கியுள்ளது. 
இதையடுத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இந்த இரு மாதங்களுக்கான நாளிதழ்களை வாங்கிக் கொள்ளலாம், அதற்கான தொகை அவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி வைக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com