ஒரே நாளில் 900 பேர் திடீர் நீக்கம்: அமெரிக்க நிறுவனம் மீது பொறியாளர்கள் புகார்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 900 பேரை ஒரே நாளில் திடீர் பணி நீக்கம் செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 900 பேரை ஒரே நாளில் திடீர் பணி நீக்கம் செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட பொறியாளர்கள் தொழிலாளர் நல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை குறளகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொறியாளர்கள் சார்பில் புகார் அளித்த தகவல் தொடர்புத்துறை தொழிலாளர்களின் சங்கப் பொதுச் செயலாளர் அழகு நம்பி வெல்கின் நிருபர்களிடம் கூறியது:
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப தனியார் நிறுவனம் புணே, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, தில்லி ஆகிய நகரங்களில் அலுவலங்களை நிறுவி சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பொறியாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தது. இவர்கள் அனைவரும் 8 முதல் 15 வருடங்களாக பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிச.12-ஆம் தேதியன்று சென்னை, ஹைதராபாத் அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 900 பேரை 7 நிமிட கால அவகாசம் கொடுத்து பணியிலிருந்து விலக கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்கியுள்ளது. இதேபோன்று மேலும் பலரை வேலையிலிருந்து அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.
எனவே மாநில தொழிலாளர் நலத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உரிய நியாயம் கிடைக்கும்வரை போராடுவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com