பிப்.9 முதல் 6 நாள்களுக்கு சென்னையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்: பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு

பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 82-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் வரும் 9-ஆம் தேதி முதல் 14 - ஆம் தேதி வரை அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களை
பிப்.9 முதல் 6 நாள்களுக்கு சென்னையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம்: பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு

பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 82-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் வரும் 9-ஆம் தேதி முதல் 14 - ஆம் தேதி வரை அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களை ஒரே இடத்தில் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்கத்தின் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பிரம்மா குமாரி பி.கு. பீனா நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் 82-ஆம் ஆண்டு விழா நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு சிவராத்திரி தினத்தையும் இணைத்து சென்னையில் இவ்விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அதன்படி, சென்னையில் 12 ஜோதிர்லிங்கங்ளையும், அமர்நாத்திலுள்ள பனி லிங்கத்தையும் ஒரே இடத்தில் மக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளோம். 
இந்நிகழ்ச்சி வரும் பிப்.9 முதல் 14 -ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
இராஜயோக ஞான விளக்கம்: இதில், லிங்க தரிசனம் செய்த பிறகு, இராஜயோக ஞான விளக்கம் படக் கண்காட்சியாகவும், விடியோ காட்சியாகவும் காண்பிக்கப்படும். 
அதன் பிறகு 5 நிமிஷம் அமர்ந்து தியானிக்க, பிரத்யேக தியானக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் தாய்மார்களுக்கான விளக்கு தியானம், திருநங்கைகளுக்கான தனி நிகழ்ச்சி, தேர்வு பயத்தை நீக்கும் வழிகள் என்னும் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி, தமிழ் படைப்பாளிகள், அறிஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி, மன அழுத்தத்துக்கு விடை கொடுப்போம் என்னும் பொது நிகழ்ச்சி, அர்ச்சகர்கள், ஓதுவார்கள், உபன்யாசகர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி, கலைத்துறையினருக்கான நிகழ்ச்சி, ஓய்வு பெற்ற முதியோருக்காக முதுமையை வெல்வோம் நிகழ்ச்சி, தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான நிகழ்ச்சி என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com