ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலை விவகாரம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னையை அடுத்த ஆவடியில் ராணுவ வீரர்களுக்கான சீருடை தயாரிக்கும் ஆலையை முடக்கி வைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடியில் ராணுவ வீரர்களுக்கான சீருடை தயாரிக்கும் ஆலையை முடக்கி வைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஆவடியில் உள்ள ராணுவ சீருடை தயாரிப்புத் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி, 2 ஆயிரத்து 121-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் ஒரு தலைப்பட்சமான முடிவுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கு ஏற்ற தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற்போல் சீருடை தயாரித்துக் கொடுக்கும் ஆவடி சீருடை தொழிற்சாலை வேலை வாய்ப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.
ஆனால், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சீருடைப் படியாக ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டத்தினாலும் ராணுவ சீருடைகள் தயாரிக்கும் ஆவடி சீருடை தொழிற்சாலை முடங்கிப் போயிருக்கிறது. 
ராணுவ வீரர்களுக்கு ஆவடி சீருடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை மூலம் தரமுள்ள சீருடைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்றும், நாட்டு பாதுகாப்பில் தமிழகத்தின் பங்களிப்பாக இருக்கும் இந்த சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்திட வேண்டும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை கேட்டுக் கொள்கிறேன். 
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பையும், ராணுவ உடைகளை உற்பத்தி செய்ய வேண்டாம் என்று வழங்கியுள்ள உத்தரவையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com